பாலிவுட் நடிகையின் வாய்ப்பை தட்டிப் பறித்தார் காஐல்

பாலிவுட் நடிகையின் வாய்ப்பை தட்டிப் பறித்தார் காஐல்

KajalAgarwal26

மும்பை : பாலிவுட் நடிகையின் வாய்ப்பை தட்டிப் பறித்துள்ளார் காஜல் அகர்வால். தமிழிலிருந்து பாலிவுட்டுக்கு சென்ற காஜல் அகர்வால், அங்கு ஜொலிக்கவில்லை. அவர் நடித்த சிங்ஹம் (சிங்கம் ரீமேக்) ஸ்பெஷல் 26 படங்கள் சூப்பர் ஹிட்டாயின. ஆனாலும் காஜலுக்கு பெயர் கிடைக்கவில்லை. இப்போது பாலிவுட்டில் ஒரு பிரேக்கிற்காக அவர் காத்திருக்கிறார். இந்நிலையில் சுதீர் மிஸ்ரா தயாரிப்பில் அஜய் வர்மா இயக்கும் அவுர் தேவதாஸ் பட அறிவிப்பு வெளியானது. இதில் சுதீர் மிஸ்ராவின் ஆஸ்தான நடிகையான சித்ரங்கடா சிங் ஹீரோயினாக தேர்வானார். இதற்காக அவருக்கு அட்வான்ஸ் பணமும் தரப்பட்டது.இந்நிலையில் பாலிவுட¢டில் தனக்கு தெரிந்த நபர் ஒருவர் மூலம் பட டைரக்டர் அஜய் வர்மாவை தொடர்புகொண்டாராம் காஜல். 

சமீபத்தில் இருவரும் ஒரு பார்ட்டியில் சந்தித்து பேசியுள்ளனர். அதன் பின் திடீரென Ôஅவுர் தேவதாஸ்Õ படத்திலிருந்து சித்ரங்கடா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் காஜல் அகர்வால் தேர்வானதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது.காஜல் அகர்வால் தனது வாய்ப்பை தட்டிப் பறித்ததால் ஆத்திரம் அடைந்துள்ளார் சித்ரங்கடா. பதிலுக்கு காஜல் நடிக்கும் பட வாய்ப்புகளை அவரிடமிருந்து பறிக்க அவர் முடிவு செய்துள்ளதாக பாலிவுட் மீடியா சொல்கிறது. அடுத்த மாதம் வெளியாகும் சூர்யா நடிக்கும் Ôஅஞ்சான்Õ படத்தில் சித்ரங்கடா ஒரு பாட்டுக்கு ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.