ஐரோப்பா செல்கிறார் விஜய்

ஐரோப்பா செல்கிறார் விஜய்

vijay 57 (1)

சென்னை : கத்தி பட ஷூட்டிங்கிற்காக ஐரோப¢பிய நாடுகளுக்கு செல்கிறார் விஜய்.ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷனில் விஜய், சமந்தா நடிக்கும் படம் கத்தி. இதன் இறுதிகட்ட ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் வசன காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிந்துவிடும். அதன் பிறகு 2 பாடல் காட்சிகளை மட்டும் படமாக்க வேண்டுமாம். 

அதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல படக்குழு முடிவு செய்துள்ளது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் காட்சிகளை ஷூட் செய்ய விஜய், சமந்தா, முருகதாஸ் உள்பட படக்குழுவினர் அடுத்த மாதம் இறுதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். 3 நாடுகளில் பாடல் காட்சிகளை படமாக¢க திட்டமிட்டுள்ளனர். எந்தெந்த நாட்டில் படமாக்குவது என்பதை ஆலோசித்து வருகின்றனர்.