கெமரூன் பிரதமரின் துணைவியாரைக் கடத்திய தீவிரவாதிகள்

கெமரூன் பிரதமரின் துணைவியாரைக் கடத்திய தீவிரவாதிகள்

Kidnappers

கெமரூன், 28 ஜூலை- நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்கான நைஜீரியா வந்த கெமரூன் நாட்டுத் துணைப் பிரதமரின் மனைவியை பொக்கோ ஹராம் தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர்.

சமீபத்தில் பள்ளி மாணவிகள் 200க்கும் அதிகமானவர்களைக் கடத்திய பொக்கொ ஹராம் தீவிரவாதிகள் சிறையில் உல்ள தங்கள் இயக்கத்தவர்களை விடுதலை செய்யக்கோரி நிர்பந்தம் செய்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, உலக நாடுகளின் முயற்சியின் ஒரு பகுதியாக நைஜீரியாவில் தொடர் தாக்குதல்களையும் ஆட்கடத்தலையும் புரிந்து வரும் பொக்கோ ஹராம் தீவிரவாதிகளை ஒடுக்க கெமரூன் அரசாங்கம் தனது இராணுவத்தை அனுப்பியது. இது அத்தீவிரவாத கும்பலை மேலும் கொதிப்படையச் செய்தது.

இதனையடுத்து நைஜிரியாவின் அண்டை நாடாகத் திகழும் கெமரூனின் வடக்கில் அமைந்துள்ள கொகொபத்தா நகரம் வழியாக நுழைந்த பொக்கோ ஹராம் தீவிரவாதிகள் அந்நாட்டுத் துணைப் பிரதமர் அமாதாவ் அலியைத் தாக்கியதோடு அவரது மனைவியைக் கடத்திச் சென்றுள்ளனர்.

கெமரூன் நாட்டுத் துணைப்பிரதமரின் மனைவி மற்றும் கொலொபத்தா நகரின் மேயர் செய்னி பவ்கர் லாமெய்ன்னையும் தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர். இத்தாக்குதலின் போது மொத்தம் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.