காமன்வெல்த் போட்டி: சைக்கிளோட்ட வீரருக்கு எச்சரிக்கை

காமன்வெல்த் போட்டி: சைக்கிளோட்ட வீரருக்கு எச்சரிக்கை

3719

கிலாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் சர்ச்சையைக் கிளப்பிய மலேசிய சைக்கிளோட்ட பந்தய வீரர் அசிசுல்ஹஸ்னிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் போட்டி பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாக அவர் அணிந்திருந்த Save Gaza எனும் வார்த்தைகள் அடங்கிய கையுறை அணிந்திருந்தது, அரசியல் ரீதியான சர்ச்சையை கிளப்பும் வகையில் அமைந்திருந்ததாக வர்ணிக்கப்பட்டது.

ஆனால் தாம் அந்த நோக்கத்தில் அந்த கையுறையை அணியவில்லை என்றும், தமது நடவடிக்கை தவறாக புரிந்துகொள்ளப்பட்டது குறித்து அசிசுள் வருத்தம் தெரிவித்தார்.