முதலீட்டாளர்களின் முதல் தேர்வு அமெரிக்கா: ஒபாமா

முதலீட்டாளர்களின் முதல் தேர்வு அமெரிக்கா: ஒபாமா

Barack Obama

தனது ஆட்சியில் முதலீட்டாளர்கள் விரும்பும் முதல் நாடாக அமெரிக்கா உருவாகியுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஒபாமா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி கூட்டத்தில் இது குறித்து அவர் மேலும் பேசியது: நான் அமெரிக்க அதிபர் ஆனபோதும் முதலீட்டுக்கும், தொழில் செய்வதற்கும் ஏற்ற நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்தில் இருந்தது. ஆனால் இப்போது அமெரிக்கா அந்த இடத்தைப் பெற்றுள்ளது.

பொருளாதார மந்தநிலையில் இருந்து அமெரிக்கா வேகமாக முன்னேறியுள்ளது. அதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகள்தான் காரணம். தொழில் வளம் மிகுந்த போட்டி நாடுகளைவிட அமெரிக்க வேகமாக முன்னேறியுள்ளது. பொருளாதாரச் சிக்கலில் இருந்தும் விரைவில் விடுபட்டு வளர்ச்சிப் பாதையை எட்டியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகை யில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அளவுக்கு இணை யாக உள்நாட்டிலேயே எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.

நான் அதிபராகப் பொறுப் பேற்றபோது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி கண்டி ருந்தது. ஆனால் இப்போது எரி சக்தி உற்பத்தியை இரு மடங்காக் கியுள்ளோம். காற்றாலை மின்னுற் பத்தி மூன்று மடங்காகியுள்ளது. சூரிய மின் சக்தி உற்பத்தி 10 மடங்காக அதிகரித்துள்ளது. கார்பன் மூலம் ஏற்படும் மாசு பாட்டை குறைத்துள்ளோம். தொழில்வளம் மிக்க நாடு ஒன்றில் கார்பன் மாசுபட்டை குறைப்பது மிகப்பெரிய சாதனை.

மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் இடைநிற்பது குறைந்துள்ளது. கல்லூரி கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 1990-களுக்குப் பிறகு இப்போது உற்பத்தித் துறை எழுச்சியடைந்துள்ளது.

வேலையின்மை விகிதம் கணிச மாக குறைந்துள்ளது. பொருளா தார வசதியில் பின்தங்கியுள்ள மக் களுக்கும் சிறப்பான மருத்துவச் சேவை கிடைக்க வழிவகை செய் யப்பட்டுள்ளது. எனது ஆட்சியில் பங்குச் சந்தையும் எழுச்சி பெற்றுள்ளது என்று ஒபாமா பேசினார்.