உக்ரைன் பிரதமர் ராஜினாமா:-

உக்ரைன் பிரதமர் ராஜினாமா:-

Arseni

உக்ரைன் பிரதமர் அர்செனி யட்சென்யுக் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து உக்ரைன் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் உக்ரைன் உள்நாட்டு அரசியலில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆளும் கூட்டணியில் இருந்து பல்வேறு கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் பதவியை ராஜினாமா செய்வதாக அர்செனி யட்சென்யுக் தெரிவித்தார்.

இந்நிலையில், ஆளும் கட்சி முடங்கியுள்ளதால் இன்னும் 30 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டிய நெருக்கடிக்கு அதிபர் பெட்ரோ போரோசென்கோ தள்ளப்பட்டுள்ளார்.

இந்த நெருக்கடி ஒரு புறம் இருக்க, பிரதமர் ராஜினாமாவால், கடந்த வாரம் உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் மலேசிய விமானம் எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான விசாரணைக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கிளர்ச்சியாளர்கள், அரசு தரப்பினருக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் விபத்து பகுதியில் தாக்குதல் நிறுத்தப்பட்டிருந்தாலும், அங்கிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள டோனெட்ஸ்கில் தாக்குதல் தொடர்கிறது.