புக்கிட் டாரா தேசிய மாதிரி ஆரம்ப தமிழ் பள்ளிக்கு மலேசிய கல்வி துணை அமைச்சர் மாண்புமிகு P. கமலநாதன் அவர்கள் மற்றும் ம இ கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் திரு. C. சிவராஜ் அவர்களும் 25/07/2014 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு மலேசிய கல்வி துணை அமைச்சர் மாண்புமிகு P. கமலநாதன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டனர். பள்ளியை சேர்ந்த ஆசியர்கள், மாவட்ட கல்வி துறை அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தொகுதி ம இ கா தலைவர்கள் இந்த கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்று பள்ளியின் தற்போது நிலைமை குறித்தும் பள்ளிக்கு தேவையான வசதிகள் குறித்தும் கல்வி துணை அமைச்சருடன் கலந்துரையாடினர். குறைகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் சற்று காலதாமதம் ஆனாலும் கண்டிப்பாக நிவர்த்தி செய்யப்படும் என கல்வி துணை அமைச்சர் உறுதி அளித்தார். வசதி குறைபாடுகள் இருந்தாலும் இத்தகைய பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் சிறப்பாக இருப்பதாக மாண்புமிகு P. கமலநாதன் தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.













