அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற நரேந்திர மோடியை அழைக்க வேண்டும்:எம்பிக்கள் 83 பேர் கடிதம்

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற நரேந்திர மோடியை அழைக்க வேண்டும்:எம்பிக்கள் 83 பேர் கடிதம்

Narendra

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற அழைப்பு விடுக்க வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவருக்கு 83 எம்பிக்கள் கையெழுத்திட்டு கடிதம் அனுப்ப உள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக் காவுக்கு பயணமாக வருகிறார்.

ஜனநாயக நெறிமுறைகள் அடிப்படையில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிகரற்ற நெருக்கம் நிலவுகிறது என்பதே நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் குரல். இந்த உறவை விரிவுபடுத்த மோடியின் பயணம் நல்ல வாய்ப் பாகும் என்று கூறி இருக்கிறார் அமெரிக்க எம்பி பிராட் ஷெர்மான்.

அவையின் வெளியுறவு விவகார கமிட்டி மூத்த உறுப் பினராக உள்ள ஷெர்மான் பிற எம்பிக்களான டெட் போ, ஈனி பேலியோ மவேகா ஆகியோருடன் இணைந்து கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற மோடிக்கு அழைப்பு விடுக்கும்படி பிரதிநிதிகள் அவையின் தலைவர் ஜான் பெய்னரை வலியுறுத்தி உள்ளனர்.

இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடியை உரையாற்ற அழைக்க நான் எடுத்துள்ள முயற்சியில் 82 பேர் சேர்ந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது என்றார் ஷெர்மான்.

வளர்ந்து வரும் பொருளாதார சக்தியான இந்தியா இந்த பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்புக்கு நல்ல பங்களிப்பு ஆற்றி வருகிறது. கடந்த 3 தசாப்தங்கள் ஒவ்வொன்றிலும் இந்திய பிரதமர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றியுள்ளனர். இந்த பாரம்பரியம் தொடர மோடியின் பயணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் மேலும் சில எம்பிக்கள் கையெழுத்திட உள்ளனர். விரைவில் இந்த கடிதம் பிரதிநிதிகள் அவையின் தலைவருக்கு அனுப்பி வைக் கப்பட உள்ளது.