இரண்டாவது இன்னிங்சிலும் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் ஹீரோக்களுடனும் நடித்து வருகிறார். விஜயசேதுபதி உள்ளிட்ட இளம் நடிகர்கள், அவருடன் நடிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில், ‘நயன்தாரா செம அழகு’ என்று மேடையிலேயே பேசினார் விஜயசேதுபதி. இப்படி நடிகர்கள், தன் அழகை புகழ்வதால், சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. அவர் கூறுகையில், ‘என்னுடன் நடிக்க விரும்பும் அனைத்து ஹீரோக்களுடனும் நடிக்க, நானும் ஆவலாகவே உள்ளேன்’ என்கிறார்.