என் தமிழ்

அஸ்ட்ரோ வர்த்தக விழாவில் களைக் கட்டியது ராகாவின் கலைநிகழ்ச்சி

27sept_thr-raaga-deepavali-kondattam-at-gm-klang_2

கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை, 4 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டியில் அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2017, டிஎச்ஆர் ராகாவின் “டி.எச்.ஆர் ராகாவின் A&A தீபாவளி கொண்டாடுவோம்” நிகழ்ச்சியுடன் மிகப் பிரம்மாண்டமான முறையில் முடிவுற்றது.

ஆனந்தா, உதயா, ராம், ரேவதி, சுரேஷ், கவிமாறன், கீதா, அகிலா, ஷாலு, ஜெய், யாசினி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இடைவிடாத ஆடல் பாடல் என பல அற்புதமான படைப்புகள் படைத்தார்கள்.

அதை வேளையில் டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்களுடன் இணைந்து அண்மையில் நடைபெற்ற ராகாவின் ஸ்டார் போட்டியின் இறுதிச்சுற்றின் போட்டியாளர்களான அருள்வேந்தன், நிமலன், சபேஷ் மற்றும் திவேஸ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களுடைய அசத்தலான படைப்புகளை வழங்கினர்.

அதுமட்டுமின்றி, வந்திருந்த இரசிகர்களுக்காக ராகாவின் அறிவிப்பாளர்கள் பல போட்டி விளையாட்டுகளையும் ஏற்று நடத்தி பரிசுகளை வழங்கினார்கள். ராகாவின் தீபாவளி பாடலுடன் இந்நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இக்கலைநிகழ்ச்சியை எதிர்வரும் அக்டோபர் மாதம் அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201 மற்றும் அஸ்ட்ரோ கோவில் கண்டு களிக்கலாம். அதுமட்டுமின்றி, இந்நிகழ்ச்சியின் புகைப்படங்களை டி.எச்.ஆர் ராகாவின் முகநூலில் காணலாம்.

27sept_thr-raaga-deepavali-kondattam-at-gm-klang_1 27sept_thr-raaga-deepavali-kondattam-at-gm-klang_3 27sept_thr-raaga-deepavali-kondattam-at-gm-klang_4 27sept_thr-raaga-deepavali-kondattam-at-gm-klang_5 27sept_thr-raaga-deepavali-kondattam-at-gm-klang_6

Scroll to Top