காமன்வெல்த் விளையாட்டு: இந்திய பேட்மிண்டன் அணி கானாவை வென்றது

காமன்வெல்த் விளையாட்டு: இந்திய பேட்மிண்டன் அணி கானாவை வென்றது

chetan-anand

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பேட்மிண்டன் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி இன்று கானாவை எதிர்கொண்டது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பருபள்ளி காஷ்யப் 21-6, 21-16 என்ற செட்கணக்கில் டேனியல் சாமை வென்றார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஸ்டெல்லா அமாளாவை 21-7, 21-5 என்ற நேர்செட்களில் வென்றார். இதனால் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் அக்சய் திவால்கர்-பிரணப் சோப்ரா ஜோடி, இம்மானுவேல் டாங்கர்-ஆப்ரகாம் அயிட்டே ஜோடியை 21-7, 21-11 என்ற செட்கணக்கில் 22 நிமிடங்களில் வெற்றியை எட்டியது.

இதேபோல் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ஜோடியான ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா தங்கள் பிரிவு ஆட்டத்தில் 13 நிமிடங்களில் வெற்றி பெற்றனர். இறுதியாக துளசி, கீதாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் கலப்பு இரட்டையர் பிரிவில் 21-5, 21-9 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றனர். இதனால் இந்தியா 5-0 என்ற கணக்கில் கானாவை வீழ்த்தியது.