சாம்பியன்ஸ் லீக் ரிக்கெட் போட்டி செப்.13 முதல் அக்.4 வரை இந்தியாவில் நடக்கிறது

சாம்பியன்ஸ் லீக் ரிக்கெட் போட்டி செப்.13 முதல் அக்.4 வரை இந்தியாவில் நடக்கிறது

cricket

12 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற செப்டம்பர் 13-ந்தேதி தொடங்கி அக்டோபர் 4-ந்தேதி வரை நடக்கிறது. ஐதராபாத், பெங்களூர், சண்டிகர் மற்றும் ராய்ப்பூர் ஆகிய 4 இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இந்தியாவில் இருந்து நான்கு அணிகளும், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவில் இருந்து தலா 2 அணிகளும், பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு அணியும் இடம்பெறும்.

இதில் பங்கு பெறும் 12 அணிகளில் 11 அணிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 12-வது அணியாக தற்போது கரீபியன் பிரிமியர் லீக்கில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி தகுதி பெறும்.

13-ந்தேதியில் இருந்து 16-ந்தேதி வரை தகுதிச் சுற்று நடைபெறும். 17-ந்தேதியில் இருந்து லீக் போட்டிகள் தொடங்கும்.

முதல் லீக் போட்டியில் ஐ.பி.எல். சாம்பியன் கொல்கத்தா அணியும், 2010-ம் ஆண்டு சாம்பியன் லீக் 20 ஓவர் போட்டி சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற கொல்கத்தா, இரண்டாம் இடம் பெற்ற பஞ்சாப் மற்றும் 3-வது இடம் பெற்ற சென்னை அணிகள் நேரடியாக தகுதிப் பெற்றுள்ளன. 4-வது இடம் பெற்ற மும்பை அணி தகுதி சுற்றில் விளையாடி வெற்றி பெற்றால் லீக் பிரிவில் இடம்பெறும்.

சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் ‘ஏ’ பிரிவிலும், பஞ்சாப் ‘பி’ பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. இறுதிப்போட்டி அக்டோபர் 4-ந்தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் மொத்தம் 36 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.