பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை: 28-வது குழு புறப்பட்டது

பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை: 28-வது குழு புறப்பட்டது

amarnath

அமர்நாத் யாத்திரை செல்லும் 28-வது குழு இன்று பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றது. 

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். 

அதன்படி இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்கி உள்ளது. கரடு முரடான மலைப்பாதை வழியாக பயணித்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்து வருகின்றனர். 

இந்நிலையில், பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து இன்று 28-வது குழு புறப்பட்டுச் சென்றது. 1045 யாத்ரீகர்கள் கொண்ட இந்த குழு 28 வாகனங்களில் இன்று அதிகாலை 4.50 மணிக்கு தங்கள் பயணத்தை தொடங்கியது. ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையைக் கடந்து சென்றுள்ள இவர்கள் இன்று மாலை பல்ட்டல் மற்றும் பகல்காம் மலையடிவாரத்திற்கு சென்றடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள. 

இவர்களையும் சேர்த்து இதுவரை 49 ஆயிரத்து 205 பக்தர்கள் ஜம்மு அடிவார முகாமில் இருந்து அமர்நாத் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.