என் தமிழ்

பிகினி உடை அணிய பிரச்னையில்லை: சுர்வீன் சாவ்லா

Leone

தமிழில், மூன்று பேர் மூன்று காதல், புதிய திருப்பங்கள் படங்களில் நடித்திருப்பவர் இந்தி நடிகை சுர்வீன் சாவ்லா. இப்போது அர்ஜுன் இயக்கி, நடிக்கும் ஜெய் ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: இந்தியில் ஹிம்மத்வாலா படத்தில் சின்ன கேரக்டரில் நடித்தேன். இப்போது நடித்து வெளியாகியுள்ள ஹேட் ஸ்டோரி 2 படத்தில் முன்னணி கேரக்டரில் நடித்துள்ளேன். இதில் என் நடிப்பு பாரட்டப்படுகிறது. நெருக்கமான காட்சிகளில் எப்படி நடித்தீர்கள் என்று கேட்கிறார்கள்.

இந்தப் படத்தின் ஹீரோ ஜெய் எனக்கு ஏற்கனவே தெரிந்தவர் என்பதால் பெரிய பிரச்னை ஏதும் இல்லை. அதுமட்டுமல்லாமல் அப்படிபட்ட காட்சியிலோ பிகினி உடை அணிந்து நடிப்பதற்கோ எனக்கு தயக்கம் ஏதுமில்லை. கதையில் அதுவும் ஓர் அங்கமாக இருக்கும்போது எனக்கும் பிரச்னையில்லை.

Scroll to Top