குழந்தை பிரிஷா சந்திரனின் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவில் நடக்க இருக்கிறது. இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 3,00,000 ரிங்கிட் வரை செலவு பிடிக்கும் என கூறப்பட்ட நிலையில் பிரிஷாவின் மருத்துவ செலவிற்கு உதவி செய்ய பல அமைப்புகளும் தனி நபர்களும் முன்வந்திருக்கின்றனர்.
பாஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் RMS சாரா இயக்கத்தில் பென் ஜி போன்றோர் நடிப்பில் உருவாகியிருக்கும் மாமா மச்சான் மலேசிய தமிழ் திரைப்படம் எதிர்வருகின்ற ஆகஸ்டு மாதம் 3ஆம் தேதி மலேசியா எங்கும் உள்ள 18 திரையரங்குகளில் திரையிடப் படுகிறது. குழந்தை பிரிஷாவின் மருத்துவ செலவிற்கு உதவும் வகையில் மாமா மச்சான் குழுவினர் நேற்று 31/07/2017 ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். மாமா மச்சன் திரைப்படத்தின் முதல் நாள் திரையரங்கு வசூல் முழுவதையும் குழந்தை பிரிஷாவின் மருத்துவ செலவிற்கு தானமாக வழங்குவது என்ற ஒரு பெருந்தன்மையான முடிவை மாமா மச்சான் இயக்குந சாராவும் நடிகர் பென் ஜி யும் ஒரு காணொளி மூலம் நேற்று 31/07/2017 அன்று அறிவித்தனர். 18 திரையரங்குகளில் முதல் நாள் 5 காட்சிகள் என மொத்தம் 90 காட்சிகளின் வசூல் முழுவதும் அளிக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு பொது மக்களிடமும் மலேசிய கலைஞகளிடையேயும் பெரும் வரவேற்பை மட்டுமல்லாமல் ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளது. மாமா மச்சான் திரைப்படத்தை முதல் நாள் திரையரங்குகளில் சென்று காண்பதன் மூலம் குழந்தை பிரிஷாவின் மருத்துவத்திற்கு உதவ முடியும். மேலும் குழந்தை பிரிஷாவிற்கு உதவி தேவைப்படுவது குறித்து பலர் அறியவும் மாமா மச்சான் குழுவினரின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
குழந்தை பிரிஷாவிற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அவர் நலமுடன் பல்லாண்டு காலம் வாழவேண்டும் என வாழ்த்துகிறோம்.
மாமா மச்சான் குழுவினரின் காணொளி
https://www.facebook.com/839443106104015/videos/1473536396028013/