மலேசிய தல அஜீத் நற்பனி மன்றம் (MTAFC) 01/07/2017 அன்று மாலை அஜீத்தின் எதிர்வருகின்ற திரைப்படம் விவேகத்தில் சர்வைவா என்ற ராப் பாடல் பாடி உள்ள ராப் உலகின் முடிசூடா மன்னன் திரு யோகி பி உடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை காஜாங்கில் உள்ள ஓரியண்டல் க்ரிஸ்டல் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தனர். விவேகம் படத்தில் சர்வைவா பாடலை பாடிய யோகி பி மலேசிய அஜித் ரசிகர்கள் சார்பாக கௌரவிக்கப்பட்டார். ஆஜித் ரசிகர்கள் சார்பாக மாணவ மாணவியருக்கு உதவிப் பொருட்கள் வழங்கட்டது. அதனை தொடர்ந்து யோகி பி உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
யோகி பி உடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி MTAFC ஏற்பாடு
