தேசிய ம.இ.கா தகவல் பகுதி மற்றும் சிலாங்கூர் ம.இ.கா தகவல் பிரிவு ஏற்பாட்டில் 14வது பொதுத் தேர்தலை முன்னிட்டு தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிலரங்கம் ஜூன் 11, 2017 காலை 8.00 முதல் மாலை 5.00 மணி வரை நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சியை ம.இ.கா தேசிய தகவல் பிரிவு தலைவர் டத்தோ VS மோகன் துவக்கி வைத்தார். பயிற்சி ஏற்பாடுகளை திரு. MB ராஜா, சிலாங்கூர் மாநில ம.இ.கா தகவல் பிரிவு தலைவர் செய்திருந்தார். இந்த பயிரலங்கின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் திரு. சுபாஷ் சந்திரபோஸ் – சிலாங்கூர் இளைஞர் தகவல் பிரிவு தலைவர். நிகழ்ச்சியில் பல்வேறு துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு பயிற்சிக்கு வந்திருந்தவர்களுக்கு பயனுள்ள பல விஷயங்களை விளக்கி பயிற்சி அளித்தார்கள்.
சத்ய சாய் நிறுவனத்தின் சமூக ஈடுபாட்டிற்கான சர்வதேச ஒருங்கிணைப்பாளர் மற்றும் சமயங்களுக்கிடையேயான சேவை நட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசியர் Dr. சுரேஷ் முழுமையான தலைமைத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார். பொருளாதாரம் / ஜி.எஸ்.டி. என்றால் என்ன? என்ற தலைப்பில் திரு. காலேஷ் – சிலாங்கூர் TOT குழு உறுப்பினர் பல முக்கிய தகவலை தனது உரையில் பகிர்ந்தார். இந்திய சமுதாயத்திற்கான தற்போதைய முன்னெடுப்புகள் என்ற தலைப்பில் பேசிய திரு. சுபாஷ் – சிலாங்கூர் இளைஞர் தகவல் பிரிவு தலைவர் பல முக்கிய தகவல் பகிர்ந்து கொண்டது கண்டிப்பாக பயிற்ச்சியில் பங்கெடுத்தவர்களுக்கு அரசியல் களத்தில் பெரும் உதவியாக இருக்கும். திரு. சேகரமூர்த்தி – தலைமை நிறுவன மேலாளர் மற்றும் முன்னாள் தலைவர் CAMA மற்றும் முன்னாள் தலைவர் நிறுவனங்களின் சங்கம் மற்றும் ஆலோசகர் சத்ய சாய் பாபா பூச்சோங் மையம் அவர்கள் தலைமைத்துவப் பண்புகள் மற்றும் பேச்சுத்திறன் பற்றி உரையாற்றியது அனவருக்கும் பயனுள்ளதாக இருந்தது. சிலாங்கூர் மாநில துணை தலைவர் திரு. வின்சன் பயிற்சியை நிறைவு செய்து வைத்தார்.