15.6 மில்லியன் மலேசிய ரசிகர்களைக் கொண்டு அஸ்ட்ரோ வானொலி தொடர்ந்து முன்னிலை

15.6 மில்லியன் மலேசிய ரசிகர்களைக் கொண்டு அஸ்ட்ரோ வானொலி தொடர்ந்து முன்னிலை

thr-raaga-announcers

கோலாலம்பூர், ஜூன் 8 – அண்மையில், GfKநிறுவனம்மலேசியாவில் வானொலி கேட்பவர்கள் அளவை  கணக்கிட்டு வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் அஸ்ட்ரோ வானொலி தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது. வாரந்தோறும் 77.8 சதவித அதாவது 15.6மில்லியன் ரசிகர்கள் அஸ்ட்ரோ வானொலி கேட்கின்றார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸ்ட்ரோ வானொலியின் தலைமை நிர்வாகி டாக்டர் ஜேக் அப்துல்லா கூறுகையில், அஸ்ட்ரோ வானொலியைத் தொடர்ந்து முன்னிலை வகிக்க செய்த அனைத்து இரசிகர்களுக்கும் இந்த வேளையில் எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதை வேளையில், எரா எஃப்.எம், ஹிட்ஸ் எஃப்.எம், மை எஃப்.எம் மற்றும் டி.எச்.ஆர் ராகா முறையே மலாய், ஆங்கிலம், சீன, தமிழ் மொழிகளில் தொடர்ந்து முதல் நிலை வானொலி நிலையம் எனும் இடத்தைப் பிடித்துள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

நம்  நாட்டின் முன்னணி தமிழ் வானொலியாக விளங்கும் டி.எச்.ஆர் ராகா வாரந்தோறும் 1.5மில்லியன் ரசிகர்களைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, நாட்டிலேயே தொடர்ந்து மிக அதிகமாக அதாவது 11 மணி நேரம் 23 நிமிடங்களாகக் கேட்கப்படும் வானொலியாக டி.எச்.ஆர் ராகா திகழ்கின்றது.

எங்களின் வானொலி தொடர்ந்து வளர்ச்சி கண்டு வரும் அதை வேளையில் எங்களின் இரசிகர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தளங்கள் சிறந்த ஒரு தளமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகையால், வானொலியில் மட்டுமின்றி டிஜிட்டல் வாயிலாகவும் உள்ளடக்கங்களைக் கொண்டு சேர்கின்றோம்.

மேலும், இரசிகர்களின் மத்தியில் அஸ்ட்ரோ வானொலியின் காலைநேர நிகழ்ச்சி நாட்டின் மிகப் பிரபலமான காலைநேர நிகழ்ச்சிகளாக விளங்குகின்றது. எங்களின் ஒன்பது வானொலி நிலையங்கள் வலைத்தளங்கள் மாதத்திற்கு 7.6 மில்லியன் மலேசியர்களால் பார்வையிடப்படுகின்றன. அதே நேரத்தில் டிஜிட்டல் வாயிலாக எங்கள் வானொலியைக் கேட்போர் 17 மில்லியன் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.