செலயாங் ம.இ.கா. தொகுதி, டெம்ப்ளர் ம.இ.கா சட்டமன்ற கிளை மற்றும் ஜெபிபி 14 புக்கிட் இடாமான் ஆகியோர் இணந்து வட்டாரப் பொது மக்கள் ஆதரவோடு 19.02.2017ல் ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு நூரி அடுக்கத்தில் தமிழர் திருநாள், பொங்கல் விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பாரம்பரிய கலை இலக்கிய விளையாட்டுகளோடு பொங்கல் வைத்தலும் இடம் பெற்றது. கீழ்கண்ட போட்டிகள் பொங்கல் வைபவத்தோடு நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக டத்தோ ஐஆர் ஹாஜி MD. நாஸிர் இப்ராஹிம் கலந்து கொண்டார்
1) பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி (ஆண் / பெண்)
2) கரும்பை பற்களால் உரித்தல் (ஆண்)
3) உரி உடைத்தல் (ஆண் / பெண்)
4)ஓவியம் தீட்டுதல் (4-6, 7-9, 10-12 வயதுச் சிறுவர்கள்)
5) செலயாங் அழகு ராணி – ராஜா (14 வயதுக்குக் குறைவு / 15 வயதுக்கு மேல்)
6) உடை அலங்காரம் ( 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் / பெண்)
நிகழ்ச்சியை திரு. பொன் மருதன், டத்தோ ரவின், திரு. NMS. முத்து திரு.எஸ்.பி.பிரபா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.