ம.இ.கா இளைஞர் பிரிவு #TN50 க்கான செயல் திட்டங்கள்

ம.இ.கா இளைஞர் பிரிவு #TN50 க்கான செயல் திட்டங்கள்

img-20170218-wa0045

Transformasi nasional 2050 TN50 க்கான ம.இ.கா இளைஞர் பிரிவின் செயல்திட்டங்களை மற்றும் வழிவகைகளை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன் அவர்களுடன் 17/02/2017 அன்று ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் கலந்தாலோசித்தார்.

நிகழ்ச்சிக்கு பிறகு பேசிய திரு. சிவராஜ் ம.இ.கா இளைஞர்களுக்கான #TN50 பற்றி துணை மந்திரி டத்தோ சரவணன் அவர்களுக்கு விளக்கியுள்ளோம். மலேசியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞரையும் சந்தித்து #TN50 பற்றிய அவர்களது எண்ண்க்களையும் அவர்களது விருப்பங்களையும் கேட்டறிய எனது  இளைஞர் பிரிவு தோழர்களிடம் வலியுறுத்தியுள்ளேன். நீங்கள் எல்லோரும் இதில் பங்கெடுத்து இன்னும் 30 ஆண்டுகளில் மலேசியா எப்படி மாறியிருக்க வேண்டும் என உங்களின் விருப்பங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள கேட்டுக் கொள்கின்றோம். நமது பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் அழகான வளர்ச்சியடைந்த அமைதியான மலேசியாவில் வாழ வேண்டும் என்பதே எனது கனவாகும் என திரு. சிவராஜ் சந்திரன் கூறினார்.