குட்டிஸ் குட்டிஸ் Star Singer போட்டிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு

குட்டிஸ் குட்டிஸ் Star Singer போட்டிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு

img-20170218-wa0031

ஒன் மெர்ஜ் நடத்தும் குட்டிஸ் சுட்டிஸ் Star Singer போட்டிக்கான பத்திரிக்கையாள சந்திப்பு நேற்றூ 17-02-2017 மாலை நடைபெற்றது. ஒன் மெர்ஜ் சார்பில் திரு. KK. கண்ணா மற்றும் திரு. R.லாரன்ஸ் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஸ்டார் சிங்கர்ஸ் பற்றிய விவரங்களை தெரிவித்தார்கள். அப்போது பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கான பதில்களையும் கூறினார்கள்.

அப்போது வெளியிடப் பட்ட பத்திரிக்கையாளர்கள் செய்தி குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது

குழந்தைகளின் மழைலை குரல்களால் ஈர்க்கப்படாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. மழலைக் குரலுக்கான தேடலின் தளத்தை அமைத்துக் கொடுக்கிறது One Merge Studios மற்றும் Vannam TV.

நாடறிந்த இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான R.லாரன்ஸ் மற்றும் நாடறிந்த பாடகரும் நடிகருமான கே.கே.கண்ணா , இவர்களின் முயற்சியில் முதல் முறையாக களம் காணுகிறது குழந்தைகளுக்கான Star Singer குட்டிஸ் சுட்டிஸ் குரல் தேர்வு போட்டி.

குரல் தேர்வுக்கான விதிமுறைகள்:

நாள்   : 25-26 பிப்ரவரி 2017(சனி, ஜாயிறு)
நேரம் : காலை 10 மணி மதியம் 3 வரை

இடம் : One Merge Studios, 105-1 Jalan Sultan Abdul Samad 50470 Brickfields(காந்திஸ் உணவகம் முன்புறம்)

  • 7 – 12 வயது குழந்தைகள் மட்டுமே பங்கெடுக்க முடியும்
  • 3 தமிழ்ப் பாடல்களைக் குழைந்தைகள் தேர்வு செய்து தயார் நிலையில் வர வேண்டும்.
  • 10 போட்டியாளர்கள் தேர்தெடுக்கப்படுவர்
  • இறுதிச் சுற்றுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு குரல் பயிற்சிப் பட்டறை(Workshop) வழங்கப்படும்.
  • 24/3/2017 இறுதிச் சுற்று, Temple of Fine Arts நுண்கலை மண்டபத்தில் மாலை 06க்கு நடைபெறும்.

பரிசுகள்

முதல் பரிசு                    :          3 ஆயிரம் ரிங்கிட்

இரண்டாம் பரிசு         :          2 ஆயிரம் ரிங்கிட்

மூன்றம் பரிசு             :           ஆயிரம் ரிங்கிட்

ஆறுதல் பரிசுகள்     :          10 பரிசு கூடைகள் (Hampers)

*தேர்ந்தெடுக்கப்படும் இறுதிச் சுற்று வெற்றியாளர்களை வைத்து குறுந்தட்டும்(Album) வெளியீடு செய்யப்படும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்குபெறுவதற்கும் இறுதி நிகழ்ச்சியை கண்டுகளிக்கவும் நுழைவுக் கட்டணம் இல்லை. அனுமதி இலவசம் என ஒருங்கிணைப்பாளர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்கள்.

[vsw id=”U2XQIlswVUQ” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]

img-20170218-wa0027 img-20170218-wa0028 img-20170218-wa0029 img-20170218-wa0030 img-20170218-wa0032