என் தமிழ்

Online Tamil News Malaysia

பெர்லிஸ் மாநில மஇகா ஏற்பாட்டில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி

Tamil News Malaysia

டிசம்பர் 23, பெர்லிஸ் மாநில மஇகா தொடர்புகுழு மற்றும் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு மற்றும் கலைநிகழ்ச்சி கடந்த 17 டிசம்பர் 2015 மிக சிறப்பாக நடந்தேறியது. கங்கார் பட்டணத்தில் உள்ள வாரிசான் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெர்லிஸ் மாநில மந்திரி பெசார் மாண்புமிகு டத்தோஸ்ரி அஸ்லான் பின் மான் சிறப்பு பிரமுகராக கலந்து சிறப்பித்தார். ஏற்பாட்டு குழு தலைவாரக பெர்லிஸ் மாநில மஇகா தொடர்புகுழு தலைவர் திரு.எஸ்.வெங்கடசாமி அனைத்து எற்பாடுகளையும் முன்னின்று செய்தார். மகளிர், இளைஞர் மற்றும் புத்ரா பிரிவினர் பக்கபலமாக இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்தனர்.

இங்ஙனம்
பூபாலன் நடராஜா
புத்ரா தலைவர்
பெர்லிஸ் மாநில மஇகா

Online Tamil News Malaysia Online Tamil News Malaysia Online Tamil News Malaysia

Scroll to Top