நவம்பர் 23, வங்கதேச பிரிவினையின் போது போர்குற்றத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர்கள் இருவர் இரவோடு இரவாக தூக்கிலிடப்பட்டனர். இதனைக் கண்டித்து அவர்களது ஆதரவாளர்கள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். கடந்த 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் பிரிக்கப்பட்டது. இந்த பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு எதிராக இருந்தவர்களை கொன்று போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக அலி அசன் முகமது முஜாகித் மற்றும் சாலாவுதீன் குவாதர் சவுத்திரி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இருவரின் கருணை மனுக்களை வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது கடந்த சனிக்கிழமை நிராகரித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் இரவோடு இரவாக தலைநகர் தாக்காவில் உள்ள சிறையில் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டனர்.
Previous Post: விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா