பிகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்பு

Online Tamil News Malaysia

Online Tamil News Malaysiaநவம்பர் 21, பிகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரான நிதிஷ் குமார் நேற்று பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர். ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் இளைய மகன் தேஜஸ்வி யாதவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு மகன் தேஜ் பிரதாப் சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவியேற்றார். மொத்தம் 243 உறுப்பினர் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பாஜக அணிக் கும் ஐக்கிய ஜனதா தளம் தலை மையிலான மெகா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் ஐக்கிய ஜனதா தள கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அந்க கூட்டணியில் இடம்பெற்ற லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 80, ஐக்கிய ஜனதா தளம் 71, காங்கிரஸ் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றன. புதிய அரசு பதவியேற்கும் விழா பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக அல்லாத பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.