நவம்பர் 21, ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இந்தியர்கள் உள்பட 170 பேரை சிறை பிடித்தனர். பல மணி நேர சண்டைக்கு பிறகு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த ஓட்டலில் சென்று இறங்கிய உடனேயே தீவிரவாதிகள் சரமாரியாக சுடத்தொடங்கினர். குண்டுகளையும் வெடிக்க செய்தனர். இதனால் அங்கே பதற்றம் தொற்றியது. அங்கிருந்த பலர் உயிருக்கு பயந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். இதற்கு மத்தியில், ஓட்டலில் தங்கி இருந்த 140 விருந்தினர்கள், 30 ஊழியர்கள் என 170 பேரை பணயக்கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து ஓட்டலின் 7-வது தளத்திற்கு கொண்டு சென்று அடைத்தனர். அவர்களில் துபாய் கம்பெனியில் பணியாற்றி வந்த 20 இந்தியர்கள், சீன நாட்டினர் 10 பேர், துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் 6 பேர் அடங்குவர். அமெரிக்க அதிகாரிகளும், பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்பட்டது. குறிப்பிட்ட மத நூலில் இருந்து வாசகங்களை சொன்ன 20 பேரை மட்டும் பிணைக்கைதிகளாக பிடிக்காமல் தீவிரவாதிகள் தப்பிக்க விட்டு விட்டனர்.
தீவிரவாதிகள் தாக்குதல் 20 இந்தியர்கள் தப்பித்தனர்
