நவம்பர் 20, தமது பிரஜை ஒருவர் ஐ எஸ் அமைப்பால் கொல்லப்பட்டுள்ளது தொடர்பில் சீனா கடும் சீற்றம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சூளுரை தமது நாட்டு பிரஜை ஒருவர் கொலைக்கு பொறுப்பான ஐ எஸ் அமைப்பின் பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்த சீன சூளுரைத்துள்ளது. ஐ எஸ் அமைப்பால் பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த தமது பிரஜை ஃபான் ஜிங் ஹ்யூய் பின்னர் அவர்களால் கொல்லப்பட்டார் எனச் சீனா கூறிகிறது. அவரின் மரணம் குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது. நார்வே அரசும் ஐ எஸ் அமைப்பே தமது பிரஜை ஒருவரை கொலை செய்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனக் கூறியுள்ளது. முன்னதாக இந்த இருவரின் சடலங்கள் எனக் கூறி அந்த ஜிகாதிக் குழு புகைப்படங்களை வெளியிடிருந்தது. எனினும் எங்கே அல்லது எப்போது அந்தக் கொலை நடைபெற்றன என்பது பற்றி
ஐ எஸ் எவ்விதத் தகவலும் வெளியிடவில்லை.
Previous Post: விஜய் சேதுபதியின் போங்காட்டம்