என் தமிழ்

Online Tamil News Malaysia

விஜய் சேதுபதியின் போங்காட்டம்

Online Tamil News Malaysia

நவம்பர் 20, ஆறு தோல்விகளுக்குப் பிறகு, நானும் ரௌடிதான் படத்தின் வெற்றியால் தெம்பாகியிருக்கிறார், விஜய் சேதுபதி. வேண்டப்பட்டவர்கள், விருப்பப்பட்டவர்கள் என்று அனைவருக்கும் கால்ஷீட் தந்ததால் நடுவில் கொஞ்சம் மழை மேகமாகிவிட்டது அவரது மார்க்கெட். விரைவில் போங்கு என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல். விஜய் சேதுபதியை வைத்து, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் தற்போது கார்த்தி, நயன்தாரா நடிக்கும் கஸ்மோரா படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். அந்தப் படத்துக்கு வைத்திருக்கும் பெயர்தான், போங்கு. கஸ்மோரா நத்தை வேகத்தில் நகர்வதால், அப்படம் முடியும் முன்பே போங்காட்டத்தை கோகுல் தொடங்கக்கூடும் என்கிறார்கள்.

Scroll to Top