அக்டோபர் 31, எல்லா ஆடம்பரங்களுக்குப் பின்னாலும் சிலருடைய அவஸ்தைகள் இருக்கும். ரஜினியின் அட்டகாசமான மலேசிய விசிட்டிலும் அப்படி சில அவஸ்தைகள். காபலி படப்பிடிப்புக்காக மலேசியா சென்ற ரஜினியை பாதுகாப்பாக விமான நிலையத்திலிருந்து அழைத்துவரும் பொறுப்பு தனியார் பாதுகாப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர்கள் ரஜினிக்காக ஆடம்பர லிமோ காரை ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், அவர்கள் சொன்ன நேரத்தில் ரஜினி வரவில்லை. விமான நிலையத்தில் ரஜினி வர தாமதமானது. அதனால், லிமோ டிரைவர், அடுத்த சவாரிக்கு போகணும் என்று கிளம்பப் பார்த்திருக்கிறார். 16 வயதினிலே கமல் மாதிரி முதலாளி திட்டுவார், அடுத்த சவாரிக்கு போணும், காசு கொடு என்று டிரைவர் கேட்க, அதெல்லாம் முடியாது என்று வலுக்கட்டாயமாக அவரை அங்கே சிறைபிடித்து வைத்திருக்கிறார்கள். இது குறித்து காரின் உரிமையாளரும், டிரைவரும் கூட்டாக மலேசிய போலீஸில் புகார் அளித்துள்ளனார்.
Previous Post: தமிழ்ப்பள்ளிக்கு கரம் கொடுப்போம்