அக்டோபர் 27, சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது, அதனால் ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. சிரியாவில் அமெரிக்க கூட்டுப் படைகள் மட்டுமே வான்வழி தாக்குதலை நடத்தி வந்த நிலையில் அந்த நாட்டு அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய போர் விமானங்களும் கடந்த ஒரு மாதமாக அங்கு கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால் சிரியாவில் உள் நாட்டுப் போர் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. போரில் இருந்து தப்பிக்க பெரும்பான்மையான சிரியா மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு படை யெடுத்து வருகின்றனர்.
சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது
