அக்டோபர் 14, நாடு முழுவதும் இணையதளம் மூலம் மருந்து பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடை செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் மருந்துக் கடை உரிமையாளர்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் மட்டும் 40,000 மருந்து கடைகள் மூடப்பட்டிருக்கும் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர் சங்க நிர்வாகி நடராஜ் கூறியுள்ளார். இணையதளம் வணிகத்தை கண்டித்து காலை 11 மணி அளவில் சென்னை வள்ளூவர்கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது எனவும் நடராஜ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மருந்து கடை உரிமையாளர்கள் போராட்டம்
