ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுமா இன்று இறுதி தீர்ப்பு

ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுமா இன்று இறுதி தீர்ப்பு

adhar

அக்டோபர் 7, இந்தியா மக்கள் சலுகை பெற ஆதார் அடையாள அட்டையை மத்திய அரசு வழங்கி வருகிறது. வங்கி கணக்கு தொடங்குதல், எரிவாயு இணைப்பு திருமணங்களை பதிவு செய்வது போன்றவற்றிற்கு ஆதார் அட்டையை மத்திய அரசும், சில மாநில அரசுகளும் கட்டாயமாக்கின. இதனை எதிர்த்து முன்னாள் நீதிபதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆதார் அட்டையை கட்டாயமாக்கக்கூடாது என்று தீர்ப்பு அளித்தது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுமா இல்லையா என்பது குறித்த தீர்ப்பு வெளியாக உள்ளதால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.