ஆகஸ்டு 12, தமிழ்நாடு ராமநாதபுரத்தை சேர்ந்த மகேந்திரன் யாதவ் துபாயில் ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக இருந்தவர். துபாய் நட்சத்திர ஓட்டலில் தனது நண்பர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்தார். அரபு நாட்டைச்சேர்ந்த வாலிபர் தனது காதலியுடன் உணவருந்தி கொண்டிருந்தார். இதனை மகேந்திரன் யாதவ் நண்பர்களுடன் செல்போனில் போட்டோ எடுத்தார். அரபு நாட்டு வாலிபர், தங்களை படம் பிடிப்பதாக எண்ணி தகராறு செய்தார். இந்த தகராறு அடிதடியாக மாறியது. இதில் மகேந்திரன் மயங்கி விழுந்தார். ஆம்புலன்ஸ் சிகிச்சை குழுவினர் மயங்கி கிடந்த மகேந்திரனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் துபாயில் மரணம்
