மேலும் சில MH370 விமானப் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன

மேலும் சில MH370 விமானப் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன

gettyimages

ஆகஸ்டு 5, கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன MH370 விமானம் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 மாயமானது. 239 பேருடன் சென்ற விமானத்திற்கு என்ன ஆனது என்று தெரியாமல் உலகமே குழம்பியது. இந்நிலையில் தான் இந்தியப் பெருங்கடலில் உள்ள லா ரீயூனியன் தீவில் விமான பாகம் ஒன்று கரை ஒதுங்கியது. பிரான்ஸில் விமான விபத்து புலன்விசாரணை ஆய்வுக் கூடத்தில் தற்போது ஆய்வு செய்யப்பட்டது. அதில், ஆய்வில் அந்த பாகம் போயிங் 777 ரக விமானத்தினுடையது என்பது உறுதியானது.

மொரீஷியஸ் அருகே இந்தியப் பெருங்கடலில் உள்ள லா ரீயூனியன் தீவில் மேலும் சில விமானப் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.