ஜூலை 28, சோமாலியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பிரபல ஹோட்டல் ஜசீரா மாளிகை மீது நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு நிரம்பிய இந்த ஹோட்டலில் நேற்று வெடி பொருள் நிரம்பிய காரை ஒட்டிவந்த தீவிரவாதி ஹோட்டலின் வெளிப்புற பகுதி மீது மோதி வெடிக்க செய்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஷபாப் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த தீவிரவாத இயக்கம் ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.