ஜூலை 17, நைஜீரியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 50 பேர் பலியாகினர். கானோ மாவட்டத்தின் தலைநகரான கானோ நகரின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பொருட்களை வாங்க மக்கள் திரண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள செருப்புக்கடை வாசலில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. பலர் உடல் சிதறி உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு மிக அருகாமையில் அடுத்தும் ஒரு குண்டு பயங்கரமாக வெடித்தது. அந்த இடமே போர்க்களம்போல் காட்சியளித்தது. சாலை நெடுகிலும் மனித உடல்கள் கிழிந்து, சின்னாபின்னமாகி சிதறி கிடந்தன.
Previous Post: தனுஷ் படம் மாரி வெளியீடு தள்ளிவைப்பு
Next Post: தயாரிப்பாளராகிறார் அமலா பால்