மோடி:ஜெர்மனி பிரதமருடன் பேச்சு

குஜராத்-மோடி

பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலில் நடந்த ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் கலந்துகொண்டு விட்டு நாடு திரும்பும் வழியில், ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் நகரில் சிறிது நேரம் தங்கி ஓய்வு எடுத்தார்.

அப்போது தான் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து அவர் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன் தொலைபேசி வழியாக பேசினார்.  60–வது பிறந்த நாள் கொண்டாடிய மெர்க்கலுக்கு அவர் அன்பான வாழ்த்துகள் கூறினார். மேலும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வென்று, ஜெர்மனி சாம்பியன் பட்டம் பெற்றதற்கும் மோடி பாராட்டு தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு டெல்லியில் நடக்கவுள்ள இந்திய–ஜெர்மனி இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அவருக்கு மோடி அழைப்பு விடுத்தார்.

இதேபோன்று அடுத்த ஆண்டு ஜெர்மனியில் நடக்கிற ‘ஹனோவர் வர்த்தக பொருட்காட்சி’யில் இந்தியா கலந்து கொள்ளுமாறு மெர்க்கல் அழைப்பு விடுத்தார்.