ஜூலை 3, விஷால், காஜல் அகர்வால், சூரி நடிக்கும் படம், பாயும்புலி இதன் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது. படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு ஒரு தங்க நாணயம் பரிசளித்தார் விஷால். நடிகர் விஜய் தனது படங்களின் பணியாற்றும் படக்குழுவினருக்கு தங்க நாணயம் பரிசளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார். இப்போது விஷாலும் பின்பற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.