ஜூன் 24, பாகிஸ்தானில் இரு மாணவர்கள் தங்களது சமூக வலைதளங்களில் செல்பி புகைப்படம் பதிவேற்றம் செய்வதற்காக பொம்மை துப்பாக்கியை வைத்துக்கொண்டு ஒருவரை விரட்டி, சுடுவது போல் விளையாடியபடி செல்போனால் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர்.
அங்கு சென்ற போலீசார் உண்மையான திருடன்தான் துப்பாக்கியை வைத்து கொள்ளையடிப்பதற்காக மிரட்டிக்கொண்டிருக்கிறான் என்று நினைத்து சிறுவன் பர்ஹானை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் பர்ஹான் உயிரிழந்தான்.
செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த மாணவரை போலீசார் சுட்டுகொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.