டத்தோ ஸ்ரீ பழனிவேல் உட்பட ஜவர் மேலும் காவல் துறையில் புகார் சட்டவிரோத கூட்டம்-ம.இ.கா இளைஞர் பிரிவு

டத்தோ ஸ்ரீ பழனிவேல் உட்பட ஜவர் மேலும் காவல் துறையில் புகார் சட்டவிரோத கூட்டம்-ம.இ.கா இளைஞர் பிரிவு

en1 en2

 

ஜூன் 19, நாளை புத்ரா உலக வாணிய மையத்தில் ம.இ.கா கிளைத்தைவர்களை சட்டவிரோதமாக டத்தோ ஸ்ரீ பழனிவேல் சந்திக்க உள்ளதை எதிர்த்து ம.இ.கா இளைஞர் பிரிவின் செத்தியவங்சா தலைவர் திரு ஆறுமுகமும் பேரா மாநில ம.இ.கா இளைஞர் பிரிவின் தகவல் பிரிவுத் தலைவர் ஸ்ரீ முருகனும் நேற்று செந்தூல் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.

கட்சியின் விதிமுறைப்படி கட்சி சார்ந்த விவகாரங்களை நீதிமன்றத்திற்கு மத்தியச் செயலவையின் அனுமதியின்றி எடுத்துச் செல்லும் அந்தக் கணமே, மனுதாரர் கட்சியின் 91வது விதிப்படி தனது உறுப்பியத்தை இழப்பார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் தொடங்கி கட்சியின் தலைவர் வரை அனைவரும் இதற்கு கீழ்படிந்தாகவேண்டும்.

ஆக 2013யின் கட்சித் தேர்தல் தொடர்பான விவகாரத்தை நீதிமன்றத்திற்கு 2009/2013 யின் மத்தியச் செயலவை உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமலே கொண்டுச் சென்ற டத்தோ ஸ்ரீ பழனிவேல், டத்தோ சோதிநாதன், தான் ஸ்ரீ பாலகிருஷ்ணன், பிரகாஷ் ராவ் & ராமலிங்கம் முதலியோர் தங்களது அங்கத்துவத்தை இயற்கையாகவே இழக்கிறார்கள். கட்சியின் பெயரையும், சின்னத்தையும், முன்னர் அவர்களுக்கு இருந்த பதவியையும் இப்பொழுது அவர்கள் பயன்படுத்த சட்டப்படியும், கட்சியின் விதிமுறைப்படியும் தகுதியற்றவர்களாக ஆகின்றனர்.

அதுமட்டுமின்றி வீணாக கட்சித் தலைவர்களுக்கு பொய்யான விசயத்தையும் பரப்பும் டத்தோ ஸ்ரீ பழனிவேலின் கூட்டம் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும். தனது தலைமைத்துவத்தை உறுப்பினர்கள் விரும்பாதப்போது ஒரு தலைவருக்கு அழகு தானாக விலகிக்கொள்வது. ஆக தன்மானம் கொண்ட தலைவர்களைப் போல் டத்தோ ஸ்ரீ பழனிவேல் தனது பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து, கட்சியின் சமுதயாத்தின் நலன் கருதி இப்படி அற்பச் செயல்களில் ஈடுப்படாது இருப்பார் என நம்புவதாகவும் தெரிவித்தார்கள்.