ஜூன் 19, ம.இ.கா கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ பழனிவேல் உட்பட 5 பதவிகளுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று திங்கட்கிழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையடித்து, கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியத்தின் ஆதரவாளர்கள் 2009-ஆம் ஆண்டு மத்திய செயலவை கூட்டத்தை கட்சியின் தேசியத் தலைவர் அனுமதி இன்றி கூட்டியதால், ம.இ.கா தலைவர் டத்தோ ஸ்ரீ பழனிவேல் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் உட்பட 15 பேரை கட்சியிலிருந்து இருந்து 12 மாதத்திற்கு தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுள்ளதாக அறிவித்தார்.
2009-2013-ஆம் ஆண்டு மத்திய செயலவைக் கூட்டத்தில் நீதிமன்றம் தீர்ப்பின் படி டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் உட்பட ஐந்து பேரின் பதவி ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் மறுதேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டதையடுத்து ம.இ.காவின் புதிய இடைக்கால தலைவராக டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் கரணமாக ம.இ.கா தற்போது இரு பிரிவாக செயல்படுகிறது. கட்சியின் நலன் கருதியும் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வரும் சனிக்கிழமை டேவான் மெர்டேக்காவில் பகல் 12 மணிக்கு அவசரக் கூட்டம் ஒன்றுக்கு டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என உதவித் தலைவரும், தலைமைச் செயலாளருமான டத்தோ எஸ்.சோதிநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதை போல் வரும் ஞாயிற்றுகிழமை ம.இ.காவின் புதிய இடைக்கால தலைவராக பெறுப்பேற்றுள்ள டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியம் தனது ஆதரவாளர்களை அழைத்து பிரம்மாண்ட கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறார். இந்த கூட்டத்தில் டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியத்தின் ஆதரவாளர்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள் என்று ம.இ.கா வட்டாரத்தில் கூறப்படுகிறது.