சென்னையில் மலேசிய தமிழ் திரைப்பட விழா கடந்த 9-ந்தேதி முதல் நடந்தது. தியாகராயநகர் தேவி ஸ்ரீதேவி பிரிவியூ தியேட்டரில் மலேசியாவில் தயாரான 10 தமிழ் படங்கள் திரையிடப்பட்டது.
இயக்குனர் மனோபாலா, நடிகர் சார்லி, பாத்திமா பாபு ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த கலைஞர்களை தேர்வு செய்தார்கள்..
சிறந்த மலேசிய தமிழ் நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா தியாகராயநகர் ஜி.என். செட்டி ஓட்டலில் இன்று நடந்தது.
விழாவில் மலேசிய மந்திரி டத்தோ சுப்பிரமணியம் பங்கேற்று சிறந்த நடிகர், நடிகை,சிறந்த இயக்குனர், ஒளிப்பதிவாளர் போன்றோருக்கு விருதுகளை வழங்கினார்.
விழாவில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, துணை தலைவர் விஜயகுமார் முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், மலேசிய எம்.பி. கோபாலகிருஷ்ணன், மலேசியன் இந்திய காங்கிரஸ் இளைஞர் பகுதி தேசிய தலைவர் டி.மோகன், மலேசிய தூதர் அன்வர், மலேசிய கலாசார இளைஞர் பிரிவு தலைவர் விஜய், நடிகைகள் நளினி, குயிலி ஆகியோர் கலந்து கொண்டனர்.