மே 20, திரிஷா, ஓவியா, பூனம்பாஜ்வா மூவரும் இணைந்து ‘போகி’ என்ற படத்தில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் தயாராகிறது. ப்ரியம் பாண்டியன் இயக்குகிறார்.
இந்த படத்தில் நடித்ததன் மூலம் திரிஷா, ஓவியா, பூனம் பாஜ்வா மூவரும் தோழிகளாகி விட்டனர். திரிஷாவுடன் நடித்தது பற்றி ஓவியா சொல்கிறார்.
திரிஷா பழக இனிமையானவர் அவரது எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. ரொம்ப நட்பாகவும் பழக கூடியவர். படப்பிடிப்பில் திரிஷாவின் தொழில் ஈடுபாட்டை முழுமையாக பார்த்தேன். திரிஷா தான் என்ரோல் மாடல். படப்படிப்பில் நாங்கள் மூவரும் எப்போதும் ஒன்றாகவே இருந்தோம். மறக்க முடியாத அனுபவம் இருந்தது.
திரிஷா பழக இனிமையானவர் ஓவியா
