என் தமிழ்

லட்சுமி மேனனை காலேஜுக்கு அழைத்து சென்ற அஜித்

lakshmi-menon1

மே 18, என்னை அறிந்தால்’ படத்துக்கு பிறகு அஜித் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் லட்சுமிமேனன் அஜித்துக்கு தங்கையாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னைக்கு அருகில் உள்ள பின்னி மில்லில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். தற்போது அஜித்-லட்சுமிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றன.

இந்நிலையில், முதன்முதலாக இப்படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் லட்சுமி மேனனை அஜித் காலேஜுக்கு அழைத்து செல்லும் படியாக அந்த புகைப்படம் அமைந்துள்ளது.

Scroll to Top