மே 15, நமது இன்றை பிள்ளைகள் தான் நாளைய நமது சமுதாயத்தை வழிநடத்த போகிறவர்கள். ஆக அப்படிப்பட் வருங்காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிகழ்கால சிற்பிகள் ஆசிரியர்கள். மாணவர்களுக்கு கல்வியை தவிர்த்து நல்ல பழக்க வழக்கத்தையும் கற்று கொடுப்பவர்கள் ஆசிரியர்கள் என்பதால் அவ்ர்களின் சேவை அளப்பரியது.
தனது பொறுப்பறிந்து தேவை அறிந்து கற்பிப்பதைத் தவிர்த்து மாணவர்களை போட்டிக்கு தயார்படுவதிலும், அவர்களுக்கு ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்கள். இந்நன்னாளில் ஆசிரியர் சமுதாயத்திடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், ஒரு மனிதனை வடிவமைக்கும் தூய தொழிலில் ஈடுபட்டுளீர்கள். ஆக அத்தொழிலை ஒரு தொழிலாக மட்டுமே பார்க்காமல் அதில் இருக்கும் சக்தி, தேவை, பொறுப்பு உணர்ந்து தியாக உணர்வுடன் செயல்பட்டால் ஒரு தரமான சமுதாயத்தை உருவாக்கிய பெருமை உங்களை சாரும். அதே வேளையில் பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவுடன் அடுத்து மேற்கல்வி தொடராது தவிர்த்து விடுகின்றனர். தயவு செய்து உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள எப்பொழுதும் தவறாதீர்கள். மேல்படிப்பைத் தொடருங்கள் மாநாடுகளில் கலந்து கொள்ளுங்கள், உள்கள் கற்பித்தல் திறனை புதுபியுங்கள், அரசாங்கத்தில் அமல்படுத்தப் படும் புதிய திட்டங்களை பின்பற்றி உங்களையும் உங்கள் வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக்கொண்டால், உங்களது மாணவர்களின் தரத்தையும் உலக சவாலுக்கு ஏற்ப நீங்கள் உயர்த்தலாம்.
ஆக இந்திய சமுதாயத்திற்கு எழுத்தறிவித்து இறைவனாக விளங்கும் அனைத்து ஆசிரியர்களையும் வணங்கி, இந்த ஆசிரியர் தினத்தில் உங்கள் அனைவருக்கும் ம.இ.கா இளைஞர் பிரிவின் சார்பில் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்க உங்கள் சேவை.