ஒரே படத்தில் திரிஷா காஜல் ஹன்சிகா

ஒரே படத்தில் திரிஷா காஜல் ஹன்சிகா

3dw

மே 13, ஹன்சிகாவை பொறுத்தவரை தமிழில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருக்கும் ‘புலி’ உள்பட 5 படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். சுந்தர்.சி. இயக்கத்தில் அரண்மனை படத்தில் ஹன்சிகா நடித்திருந்தார். இப்படத்தின் 2ம் பாகத்தை உருவாகும் சுந்தர்.சி மீண்டும் ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஏற்கனவே அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு, ஆம்பள என 3 படங்களில் சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடித்திருக்கிறார்.
ஹன்சிகாவுடன் திரிஷா, காஜல் அகர்வால் என மேலும் 2 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். சமீபத்தில் 2 ஹீரோயின்கள் ஒரே பட ஷூட்டிங்கில் இருந்தபோது யார் வேடம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று மோதிக்கொண்டார்கள். அப்படியொரு நிலைமை 3 ஹீரோயின்கள் நடிக்கவுள்ள இப்படத்திலும் ஏற்படுமா என்பது படப்பிடிப்புக்கு மூவரும் ஒரே நேரத்தில் பங்கேற்கும்போதுதான் தெரியவரும் என்கிறது பட வட்டாரம்.