நேபாளத்தில் மீண்டும் பூகம்பம் சாவு 68 ஆக உயர்வு

நேபாளத்தில் மீண்டும் பூகம்பம் சாவு 68 ஆக உயர்வு

Earthquake

மே 13, இமயமலை நாடான நேபாளத்தில் கடந்த மாதம் 25–ந்தேதி 7.9 ரிக்டரில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. அதில் 2½ லட்சம் வீடுகள் இடிந்து தரை மட்டமாயின. கோவில்கள், நினைவு சின்னங்களும் இடிந்து நாசமாயின.

இடிபாடுகளில் சிக்கி 8046 பேர் பலியாகினர். 17,800 பேர் காயம் அடைந்தனர். மீட்பு பணியில் இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 33 நாடுகள் ஈடுபட்டன. மீட்பு பணி ஓரளவு முடிந்துள்ள நிலையில் நேபாளத்தில் நேற்று மீண்டும் பூகம்பம் ஏற்பட்டது.

நேற்று பகல் 12.35 மணிக்கு எவரெஸ்ட் சிகரத்தின் அருகே நாம்சே பஜார் நகருக்கு 68 கி.மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. பூகம்பம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது