மே 12, பூகம்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைப்புகள் மற்றும் ஐ.நா. உதவி வரும் நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் தன்னந்தனியாக 1 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்துள்ளான். அமெரிக்காவின் மேரிலேண்டைச் சேர்ந்த 8 வயது சிறுவன் நீவ் சரஃப். நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தான்.
காரணம் அது அவனது பெற்றோரின் தாய்நாடு. அவர்கள் சிறுவயதில் அங்குதான் வசித்து வந்துள்ளனர். இதனால், நேபாள மக்களுக்கு தன்னால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என்று நினைத்த சிறுவன், தான் சேமித்து வைத்திருக்கும் உண்டியலை உடைத்து 384 டாலரை 24 ஆயிரம் ரூபாய் எடுத்தான். மேலும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்று அனைவரிடமும் நேபாள மக்களுக்காக உதவி கேட்டு நிதி திரட்டினார்.