மே 11, காதல் கணவர் பிரசன்னாவுடன் தியாகராய நகர் வீட்டில் ஜாலியாக பொழுதுபோக்கிக் கொண்டிருக்கும் சினேகா, புதுவரவை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார்.
‘உன் சமையல் அறையில்’ ரிலீசுக்குப் பிறகு தன்னைத் தேடி வந்த அத்தனை பட வாய்ப்புகளையும் மறுத்த அவர், கர்ப்பமானார். இதையறிந்து சந்தோஷப்பட்ட
பிரசன்னா, ‘முதலில் குழந்தை.பிறகுதான் நடிப்பு’ என்று சொல்லவே, மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்ற சினேகா, வரும் ஆகஸ்ட் மாதம் அம்மா ஆகிறார். இது அவருக்கு 6ஆவது மாதம். ‘ஆணோ, பெண்ணோ, எந்தக் குழந்தையாக இருந்தாலும் சரி, தாயும், சேயும் நலமாக இருந்தால் போதும்’ என்று சொன்ன பிரசன்னா, ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு வருவதாக வேண்டிக்கொண்டாராம்.
Previous Post: சவூதி அரேபியாவில் 30 லட்சம் இந்தியர்கள்