ஏப்ரல் 27, நேபாளத்தை கடந்த சனிக்கிழமையன்று தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 3200 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6500 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சனிக்கிழமையன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக, அங்கு நேற்று பிற்பகலில் 6.7 ரிக்டர் அளவு கொண்ட நில நடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று இரவில் 5.4 ரிக்டர் அளவு கொண்ட நிலஅதிர்வும், இன்று காலை பல பகுதிகளில் மீண்டும் நில அதிர்வும் ஏற்பட்டது. நேற்று மாலை கனமழை பெய்ததால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
இதுவரை 3218 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளதாக மீட்புப்பணி பிரிவு தலைவரான ரமேஷ்வர் டங்கல் தெரிவித்தார். 6500 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.