ஏப்ரல் 13, 2005-ஆம் ஆண்டு முதல் 2014 வரை நாட்டில் மொத்தம் 40,000 மோட்டார் சைக்கிளோட்டிகளும், பின்னால் அமர்ந்து சென்றவர்களும் விபத்தில் பலியாகியுள்ளனர் என புக்கிட் அமான் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. தலைக்கவசம் அணியாதது தான் அதிகமான உயிரிழப்புகளுக்கான காரணம் என கூறப்படுகிறது. பலியானவர்களில் 16 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் தான் அதிகம் என்பது வேதனையளிக்கும் விஷயம் என சாலைப் போக்குவரத்து துணை இயக்குனர் அப்துல் ஹாரிஸ் லாகார் தெரிவித்தார்.
Previous Post: ரொம்பின் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
Next Post: ஜெர்மனிக்கு சென்றார் பிரதமர் மோடி